தொப்பையை குறைப்பதற்கான வழிமுறைகள்!

இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்னையாக இருக்கும் தொப்பை ஏற்படுவதற்கு என்ன காரணங்கள் மற்றும் அதனை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம். தொப்பை இன்றைய உணவு முறை மற்றும் வாழ்க்கை சூழல்…

இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்னையாக இருக்கும் தொப்பை ஏற்படுவதற்கு என்ன காரணங்கள் மற்றும் அதனை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம்.

தொப்பை

இன்றைய உணவு முறை மற்றும் வாழ்க்கை சூழல் காரணமாக பெரும்பாலனவர்களுக்கு தொப்பை ஏற்படுகிறது. இது இன்றையபெரும்பாலான இளைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த என அனைத்து தரப்பு ஆண்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது தொப்பை. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும்  இது ஒரு பெரிய பிரச்னையாகவே இருக்கிறது.

தொப்பை குறைப்பதற்காக அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி கூடம் செல்வது, கசாயம் குடிப்பது, ஜூஸ் குடிப்பது என இருக்கிற அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வர். ஆனால் அதற்கான பலன் எவ்வளவு பேருக்கு கிடைத்துள்ளது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

உயிருக்கு ஆபத்தா?

இதுஒரு புறம் இருக்க தொப்பையினால் பலவித நோய்கள் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொப்பை இருப்பது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு தான் என கூறுகின்றனர். வயிற்று பகுதி அதாவது தொப்பையில் சேரும் கொழுப்புகள் தான் புற்றுநோய் முதல் இதயநோய் வரை பலவித நோய்களை உருவாக்குகின்றன.

கொழுப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்?

வயிற்று பகுதியில் கொழுப்புகள் சேருவதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் தேவையற்ற உணவுகள் தான். மேலும் கலோரிகள் அதிகம் கொண்ட உணவு பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் கொழுப்பு ஏற்படுகிறது. நாளடைவில் இதனால் பலவித பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, இரத்த நாளங்களில் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

தடுப்பதற்கான வழிமுறைகள்

தொப்பை பிரச்னையை சரிசெய்ய சரியான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். சரியான உணவு பழக்கம், தினமும் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியாமா சூழல், பழங்கள் உட்கொள்தல் போன்றவைகளை சரியாக பின்பற்றி வந்தால் தொப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

தொப்பையை குறைக்கும் சூப்பர் பானம் 

இதுகுறித்து சித்த மருத்துவர் ஜெயரூபா அளித்துள்ள சில வழிமுறைகளை குறித்து  காண்போம்.

நெல்லிக்காய், இஞ்சி, எலுமிச்சை சேர்த்த பானம் குடித்தால் கல்லீரல் செயல்பாடு அதிகரித்து தொப்பை குறையும். ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக்கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும்.

காலை எழுந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் இந்த பானத்தை கொஞ்ச கொஞ்சமாக குடிக்க வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து இந்த பானம் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய், இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த பானம் கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் சதை கொழுப்பு குறையும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.