இன்று காலை(டிச.08) நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணித்த இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனை உட்பட 13 பேர் உயிரிழந்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பலர் தொடர் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய ராணுவத்திற்க மத்திய அரசு ஒதுக்கியிருந்த நிதி குறித்து தற்போது பார்ப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2014ம் ஆண்டு மே மாதம் ஆட்சியமைத்த பின்னர், நரேந்திர மோடியின் அரசில், முழுநேர பாதுகாப்பு அமைச்சர் இருக்கவில்லை. நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கையாள்வார் என்று கூறப்பட்டது.
2014ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, அருண் ஜெட்லி முதலாவது பட்ஜெட்டை சமர்பித்தார். இதில், ராணுவ செலவுக்கு ரூ.38,42 லட்சம் கோடி நிதியை ஒதுக்குவதாக அறிவித்தார். இது அப்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.50 சதவிகிதமாகும்.
இது, முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த தொகையை விட ரூ.5,000 கோடி அதிகமாகும். 2013-14 நிதியாண்டு ஒதுக்கப்பட்டதைவிட சுமார் 9 சதவீத அதிகரிப்பாக இது அமைந்தது.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது முழுமையான பட்ஜெட் 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி சமர்பிக்கப்பட்டது. ரூ.38.70 லட்சம் கோடி ராணுவத்திற்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது ஜிடிபியில் 2.41 சதவிகிதமாகும்.
2016ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி சமர்பித்த மத்திய அரசு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராணுவத்திற்கான செலவை குறிப்பிடவில்லை. பின்னர் ரூ.42,72 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. அப்போதைய ஜிடிபியில் இது 2.51 சதவிகிதமாகும்.
இதற்கிடையில், 2015ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, ஐஎன்எஸ் விக்கிரமாதித்தியா விமானந்தாங்கி கப்பலில் தளபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “முக்கிய வல்லரசு நாடுகள் தங்களின் படைப்பிரிவுகளை குறைத்து கொண்டு தொழிற்நுட்பங்களை அதிகரித்து வருகையில், நாம் படையின் அளவை தொடர்ந்து விரிவாக்க பார்க்கிறோம். ஒரே சமயத்தில் நவீனமயமாக்குவதும், படைப்பிரிவுகளை விரிவாக்குவதும் கடினமான மற்றும் தேவையற்ற குறிக்கோளாக உள்ளது” என்று பேசினார்.
இதனைதயடுத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்திய ராணுவத்தின் வளர்ச்சிக்காக 2017ஆம் ஆண்டுக்கான இந்திய யூனியன் பட்ஜெட்டில் ரூ.48,70 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தார், இது முந்தைய நிதியாண்டை விட அதிகமாக இருந்தாலும் ஜடிபி அளிவில் கடந்த ஆண்டையே ஒட்டியிருந்தது.
2018-19 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்ததில், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.49,98 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இது முந்தைய தொகையை விட அதிகமாக இருந்தாலும் ஜிடிபி அளவில் இது முந்தை தொகையை விட குறைவாகும்.
2019 தேர்தல் ஆண்டாக இருந்ததால், பொது நடைமுறையின்படி வழக்கமான பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டில் ரூ.71.12 லட்சம் கோடி பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது அப்போதைய ஜிடிபி-ல் வெறும் 2.40% மட்டுமே.
இதற்கிடையில், முன்னதாக “நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், நமது பட்ஜெட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பட்ஜெட் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டு தொகை அதிகரிப்பது விரைவாக வேகத்தில் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். காரணம், பல தேவைகள் உள்ளது எங்களுக்கு தெரிகிறது” என்று 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கடற்படை தலைமை தளபதி சுனில் லன்பா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதேபோல “கடந்த சில ஆண்டுகளாக விமானப்படைக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையில் கணிசமான சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது… விமானப்படையை நவீனப்படுத்துவதற்கு ஒதுக்கப்படும் இந்த தொகை தொடர்ந்து பெரும் சரிவை கண்டுள்ளது. 2007-08ம் நிதியாண்டு மொத்த பட்ஜெட்டில் 17.51 சதவீதம் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2016-17ம் நிதியாண்டு இது 11.96 சதவீதமாக குறைந்துள்ளது” என்று 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்பு பற்றிய நடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.