முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் ? : உச்சநீதிமன்றம் கேள்வி

இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்றும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மராத்தியர்களுக்கு அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மராத்திய அரசுக்கு சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடுகையில் ‘மாறி வரும் காலத்திற்கேற்ப மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இட ஒதிக்கீடு சதவிகிதத்தை முடிவு செய்யும் முடிவை மாநில அரசுகளே உறுதி செய்வதுதான் சரி. 1931 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டை வைத்துத்தான் மண்டல் பரிந்துரைகள் வழங்கப்பட்டது. தற்போது இருக்கும் நிலையை, ஆய்வு செய்த பிறகே இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.

இவ்வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இந்தியா விடுதலை அடைந்து 70 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் எல்லா மாநிலங்களும் சமூக நீதியை நிலைநாட்டப் பல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது. இந்த முயற்சிகளிற்கு பிறகும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலுமா? என்று கேள்வி எழுப்பியது.

இதைத்தொடர்ந்து தனது வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ’இன்னும் இந்நாட்டில் பட்டினியால் மரணமடையும் நபர்கள் இருக்கிறார்கள். இந்திரா ஷானே வழக்கில் 1992ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நான் முற்றிலுமாக தவறு என்று கூறவில்லை. ஆனால் இட ஒதுக்கீடு கட்டாயம் என்ற சட்டம் அமலுக்கு வந்து 30 வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கிறது. 1931 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டை வைத்துத்தான் இப்போதும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இப்போது மக்கள் தொகையைக் கணக்கிட்டால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சதவிகிதம் அதிகமாக இருக்கும். எனவே அதற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.’என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் ‘நீங்கள் கூறுவதுபோல் 50 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கினால், சமத்துவம் என்ற கருத்தை எப்படி நிலைநாட்டுவது.இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு தொடரும்’. என்று கேள்வி எழுப்பினர்.

மராத்தியர்களுக்குக் கல்லூரிகளில் மற்றும் அரசு வேலைகளில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அனுமதி அளித்து மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Ezhilarasan

கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை!

Jayapriya

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சேலம் மதுஅருந்துவோர்

Vandhana