குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

இந்திய குடியரசுத் தலைவராகும் தகுதி பற்றியும், அவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது.  அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் பதவி மிக உயரிய பதவியாக கருதப்படுகிறது. தற்போதைய குடியரசு…

இந்திய குடியரசுத் தலைவராகும் தகுதி பற்றியும், அவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. 

அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் பதவி மிக உயரிய பதவியாக கருதப்படுகிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், 24ம் தேதி ஜூலை 2022 வரை உள்ளது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற உள்ளது. 35 வயது நிறைவடைந்த இந்திய குடிமகன் குடியரசு தலைவர் தேர்தலில் நிற்க தகுதியுடையவர் ஆகிறார்.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைகளின் மொத்த உறுப்பினர்கள் 776 பேரும், இந்திய மாநிலங்களில் உள்ள சட்ட பேரவைகளில் உறுப்பினர்களாக உள்ள 4120 பேரும் , குடியரசு தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

குடியரசு தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431. மாநில சட்ட பேரவை உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5, 43,231. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5, 43,200. இதில் பெரும்பான்மை எனப்படும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவரே குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். தற்சமயம் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையிலான வாக்கு மதிப்பு 48.9 சதவீதம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டனியின் வாக்கு மதிப்பு 24.2 சதவீதமாகவும், மூன்றாம் அணி எனப்படும் பிஜூ ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளின் வாக்கு மதிப்பு 26.98 சதவீதமாகவும் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பல மாநில கட்சிகளின் ஆதரவை கேட்டு களமிறங்கி விட்டதாக தகவல்கள் வந்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் இதர கட்சிகளின் ஆதரவோடு குடியரசு தலைவர் தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்தி, குடியரசு தலைவராக்க முயற்சி எடுத்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் 65.35 சதவீத வாக்குகளைப் பெற்று இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் குடியேறி, இந்திய அரசியல் அமைப்பின் பாதுகாவலராகவும / வழிநடத்துபவராகவும் , நாட்டின் முதற் குடிமகனாகவும் பொறுப்பேற்பவர் யார் என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும்.

– தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.