குரு பெயர்ச்சி 2024…. எப்படி இருக்கும்? நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் சிறப்பு நேரலை!

குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்கிறது?  நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் இன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.   கிரகங்கள் ஒரு ராசியில்…

குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்கிறது?  நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் இன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.  

கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.  இப்படி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது ஒவ்வொரு ராசிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் உருவாகின்றன என்று நம்பப்படுகிறது.  அப்படி குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதை தான் ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி என்று கூறுவர்.

குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் வாசம் செய்கிறார் என்று நம்பப்படுகிறது.  இந்த வருடம் குரு பெயர்ச்சி இன்று (மே.01) நடைபெற உள்ளது.  தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி,  ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.  இந்த குருபெயர்ச்சியானது தேய்பிறை,  அஷ்டமி திதி,  திருவோணம் நட்சத்திரம் நடக்கும் போது பெயர்ச்சியாக உள்ளார்.

இந்த நிலையில்,  குரு பெயர்ச்சி 2024 எப்படி இருக்கிறது? என்பது பற்றி  ஜோதிட ஆலோசகர் ஶ்ரீ வாராஹி ஈசநேசன் நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் இன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு நேரலையில் பேசுகிறார்.  மேலும் அவர் ஜோதிடம் சம்பந்தமான பல கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார்.  குருபெயர்ச்சி சிறப்பு நேரலை நிகழ்ச்சியை காண கீழ் உள்ள நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலின் லிங்கை கிளிக் செய்து பயனடையுங்கள்.

youtube.com/channel/UCBbgQlTV9z0qwjeofwtkhWg?sub_confirmation

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.