30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

டப் கொடுக்குமா? Hoote செயலி

நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவால் உருவாக்கப்பட்ட Hoote செயலியை நடிகர் ரஜினிகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.

Hoote செயலி அறிமுகமான ஒரே நாளில் 10,000 க்கும் மேற்பட்டோர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். “மற்ற முன்னணி செயலியை போல், இந்த செயலியும் அனைவராலும் பயன்படுத்தப்படும்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். தன் மகளுக்கு வாழ்த்தையும் அன்பையும் பகிர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Hoote செயலியை பயன்படுத்தும் பயனாளிகளிடம் கேட்கும்போது இந்த செயலியின் வழியாக தங்களின் கருத்தை வெளிப்படையாக பகிர முடியும் என்றும் தன்னுடைய கருத்தை வேறு யாரும் பதிவிட முடியாது இதனால், அவரவர் கருத்துக்கு அவர் அவர்களே பொறுப்பானவர்களாக இருக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், மற்ற முன்னணி சமூக வலைதளங்களுடன் தாக்கு பிடிக்குமா? Hoote செயலி! என்று கேட்கும்போது செயலியை பயன்படுத்தியவர்கள் தரப்பில் பாசிட்டிவாகவே சொல்லப்படுகிறது.

தமிழில் எழுதத் தெரியாதவர்கள் அல்லது தனக்கு தெரிந்த மொழியில் எழுத தெரியாதவர்கள் தனக்கு தெரிந்த கருத்தை உடனடியாக பகிர எளிமையாக இருப்பதால், அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மற்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது போன்று மிகவும் எளிமை. எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஆனால், Hoote செயலியை அப்படி பயன்படுத்த முடியாது. பொது இடங்களில் இருந்து குரல் பதிவு செய்து பதிவிடுவது எளிதாக இருந்தாலும், தம்மை சுற்றி இருக்கும் சத்தங்கள் இல்லாமல் பதிவேற்றம் செய்வது சாத்தியமில்லாதது. ஒருவேளை சத்தத்தோடு பதிவிட்டால் அது கேட்பவர்களுக்கு இடையூறாகவே அமையும். அதேசமயம் FM யில் பாடல் / செய்தி கேட்பது போன்று கார் பயணங்களின் போது இந்த செயலியின் வழியாக கருத்துக்களை (தகவல்களை) கேட்கவும் பகிரவும் முடியும் என தெரிவிக்கிறார்கள்.

முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும்போது மற்றவர்களின் பதிவை உடனுக்குடன் பார்த்து புரிந்துகொள்ள முடியும். ஆனால், Hoote செயலியில் உள்ள பதிவை (குரல் பதிவை) முழுமையாக கேட்டால் மட்டுமே பதிவினை தெரிந்துகொள்ள முடியும் என்பது போன்ற சில குறைபாடுகளை கொண்டுள்ளதாகவும், அதனை நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். எந்த சித்தாந்தமும் சரி, தொழில்நுட்பமும் சரி அடுத்தகட்டத்திற்கு நகரும்போது சில மாற்றங்கள் நிகழத்தான் செய்யும் ஆனால், காலப்போக்கில் புதிய வழிமுறைகளுக்குத் தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளாவிட்டால் அவை சந்தையில் நிற்காது. Hoote செயலியும் பெரும்பாலானோர் பயன்படுத்தும்போதுதான் நிர்வாக சிக்கல்கள் என்னென்ன உள்ளது எனத் தெரியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading