அர்னால்டுக்கு ‘பேஸ் மேக்கர்’ சிகிச்சை! X தளத்தில் வெளியான புகைப்படம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில்,  அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான ‘ஹெர்குலஸ் இன்…

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில்,  அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான ‘ஹெர்குலஸ் இன் நியூயார்க்’  திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.  பின்னர் 1984ஆம் வெளியான ‘தி டெர்மினேட்டர்’ மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் அடுத்த போட்டிக்காக விசாகப்பட்டினம் சென்றுள்ள சி.எஸ்.கே கேப்டன் தோனி | உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!

அர்னால்டுக்கு இப்போது 76 வயதாகிறது.  அவருக்கு இதயப்பிரச்சினை காரணமாக பேஸ் மேக்கர் சிகிச்சை நடந்திருக்கிறது.  இந்த விஷயம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேஸ் மேக்கர் சிகிச்சை குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது :

“நன்றி!  நான் உலகம் முழுவதிலுமிருந்து பல வகையான செய்திகளைப் பெற்றுள்ளேன். ஆனால் அதில் முக்கியமாக இது எனது பூபர் சீசன் 2 -ல் ஏதேனும் சிக்கல்களை ஏற்படுத்துமா என்று பலர் கேட்டுள்ளனர்.  நிச்சயமாக இல்லை.  ஏப்ரலில் படப்பிடிப்புக்கு செல்ல நான் தயாராக இருப்பேன்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Schwarzenegger/status/1773463966293103034?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1773463966293103034%7Ctwgr%5Ef65211dc9ea77d991e5a119dce5ce41c262f2f90%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Farnold-schwarzenegger-shows-his-pacemaker-in-hilarious-new-pic-gives-an-update-on-fubar-season-2-1099403

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.