வாரிசு அரசியலை போற்றுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் நல திட்டங்களை முடக்குவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, ஹர்டோயில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மக்கள் அனைவரும் இரண்டு முறை ஹோலி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டார்.

வாக்கு எண்ணும் நாளான மார்ச் 10-ம் தேதி, பாஜக வெற்றி பெறும் எனறு நம்பிக்கை தெரிவித்த அவர், அன்றைய தினமும் உத்தரப்பிரதேச மக்களுக்கு ஹோலி பண்டிகைதான் என்று கூறினார். மேலும், 2014 முதல் 2017 வரையிலான காலத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான நலத்திட்டங்களை நிறைவேற்றவிடாமல் தம்மைத் தடுத்ததாக கூறிய பிரதமர், வாரிசு அரசியலை போற்றுபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல திட்டங்களை முடக்குவார்கள் என தெரிவித்தார்.







