வரலாற்றில் இடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண் – ஹார்வர்ட் சட்ட இதழின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ’அப்சரா’!

ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா, அந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சட்ட இதழின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1887-ல் நிறுவப்பட்ட ஹார்வர்ட் சட்ட இதழின் 137வது தலைவராக அப்சரா…

ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா, அந்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சட்ட இதழின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1887-ல் நிறுவப்பட்ட ஹார்வர்ட் சட்ட இதழின் 137வது தலைவராக அப்சரா ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 136 ஆண்டுக்கால வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அப்சராவுக்கு வழங்கப்பட்ட இந்த பதவியில்  அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம், கணிதம் மற்றும் ஸ்பானிஷ் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார் அப்சரா.

“கலாச்சார பாரம்பரியத்தின் மதிப்பை” புரிந்து கொள்வதில் அப்சராவின் ஆர்வம், அவரை கலைப் படைப்புகள் மற்றும் கலைப்பொருட்களைக் கண்காணிக்கும் மன்ஹாட்டன் மாவட்டத்தில் தொல்பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணிபுரிய வழிவகுத்தது என்று கிரிம்சன் நாளிதழ் தெரிவித்துள்ளது.

https://twitter.com/Harvard_Law/status/1622264234221486080?s=20&t=lmF36_9iTyOklhLZCrvg-g

முன்னர் சட்டப் பள்ளியின் படிக்கும் போதே ஹார்வர்ட் மனித உரிமைகள் இதழ் மற்றும் தேசியப் பாதுகாப்பு இதழிலும் பணிபுரிந்திருக்கிறார் அப்சரா. மேலும் தெற்காசியச் சட்ட மாணவர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.