மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நாடர் காலனி பகுதியில் காமராஜ் வீதியில்
வசித்து வருபவர் ஹரிஸ். இவர் மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி மேற்கு நகர தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது வீட்டின் முன் நேற்று இரவு தனது காரை நிறுத்தி விட்டு வீட்டினுள்
சென்றுவிட்டார். பின்னர் இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கபட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் மர்ம நபர்கள் தனது கார் கண்ணாடியை உடைத்துள்ளது குறித்து
மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை கைப்பற்றி தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர் நேரில் வந்து
விசாரணையை முடிக்கிவிட்டுள்ளார்.








