ஸ்பெயினில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் அதிவிரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

ஸ்பெயினில் கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட்-பூர்டா டி அதோசா நகர் நோக்கி ஐரியோ என்ற தனியார் நிறுவனத்தின் அதிவிரைவு ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த ரயில் அடாமுஸ் அருகில் சென்ற போது திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த தடம் புரண்ட ரயில் மற்றொரு தண்டவாளத்தில் மாட்ரிட் நகரில் இருந்து ஹுவெல்வா நோக்கி சென்ற அரசு ரயில் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் பயணிகள், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து, ஜன்னலை உடைத்து கொண்டு வெளியேறும்போது, பயணிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் தடம் புரண்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்தது என பயணிகள் சிலர் கூறினர். ரயிலுக்குள் புகையும் பரவியதாக சில பயணிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அந்த தனியார் நிறுவன அதிவிரைவு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ரயில் தடம் புரண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.