முக்கியச் செய்திகள் தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்-மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார்
தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை
உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர்
ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி 2018ம் ஆண்டில்
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, திமுக
அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த
புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால்,
அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ அனுமதி கோரினார்.

ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில் மனு
தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், விஜிலென்ஸ் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்பார் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்
துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

அப்போது குறிப்பிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது
ஜின்னா எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு
மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஸ்டார்ட் அப் ரேங்கில் முன்னணி இடம் பெற்ற டான்சிம்; முதலமைச்சர் வாழ்த்து

Arivazhagan Chinnasamy

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

Arivazhagan Chinnasamy

அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..

G SaravanaKumar