மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் மதுபான
பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல கோவை உள்ளிட்ட இரு மாவட்டங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த பாட்டில்களை சேகரித்து வைப்பதற்கான இடவசதி ஏற்பாடு செய்வதில் பெரும் சிக்கலாக உள்ளதாக அரசு தெரிவித்தது. நிறைய வருமானம் ஈட்டும் துறையில் கட்டடம் கட்டுவது சிரமம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பாட்டில்களை திரும்பப் பெறுவது கூடுதல் சுமையாக இருப்பதாக ஊழியர்கள் தரப்பில்
கூறப்படும் குற்றச்சாட்டுக்குத் தீர்வு காண்பது குறித்தும், அந்த பாட்டில்களை
விற்பதற்கான டெண்டர் விதிகள் மற்றும் விலையையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய
வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.