ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசு தலைவருக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசு தலைவருக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்துகொள்கிறார். அமைப்புச் சட்டத்தில்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும்படி குடியரசு தலைவருக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக மரபுகளை மதிக்காமலும் ஆளுநர் ஆர்.என் ரவி நடந்துகொள்கிறார். அமைப்புச் சட்டத்தில் அவருக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பது போல நினைத்துக் கொண்டு ஜனநாயக மரபுகளை மீறி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

தனிப்பட்ட நோக்கங்களை அடைய நினைக்கும் ஆளுனரின் செயல்பாடுகளையும், அரசு அனுப்பும் சட்டமுன்வடிவுகளில் முடிவெடுக்காமல் இருப்பதையும் கண்டிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த கடிதத்தில் வழக்கறிஞர்கள் டி.அருண், எஸ்.அய்யாதுரை, ஏ ராஜா முகமது, டி.ஐ.நாதன், கோ.பாவேந்தன், எஸ்.டி.முஸ்தஹீம் ராஜா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.