சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்ரோன் மூலம் டெல்லியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இதற்கு முன்பாக ட்ரோன் மூலம் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
2019 ஆகஸ்டு 6-ம் தேதிதான் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஜம்மு- காஷ்மீர் பகுதிகளில் ட்ரோன் மூலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.







