முக்கியச் செய்திகள் தமிழகம்

“3-வது அலைக்கு நான்தான் காரணமா? மனுஷ்யபுத்திரன் கேள்வி

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வித்தியாசமான முறையில் தற்போது இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இணையத்தில் திடீர், திடீரென உருவெடுப்பது ட்ரெண்டுகள். அவை பிரச்னையாக இருக்கலாம். விவாதப்பொருளாக இருக்கலாம். கொண்டாட்டமாக இருக்கலாம் அல்லது கலவரமாக கூட இருக்கலாம். அந்தவகையில், தற்போது மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அரசியல்வாதி என்பதை தாண்டி, மனுஷ்யபுத்திரன் அடிப்படையில் ஒரு கவிஞர். அவரது இயற்பெயரான அப்துல் ஹமீது சேக் முகமது என்ற பெயரில் சமூக வலைதளங்களில் இயங்கி வருகிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் கோர விபத்துகளில் பாகங்கள் சிதறி கிடப்பது போல அவரது சொற்கள்  இருக்கும் .ஆனால், கவிதைகள் என்று வரும்போது, மயக்க மருந்து சாயலில் இருக்கும் அவரது சொற்கள். பொதுவாக ஒரு படைப்பாளியின் எழுத்து படிக்கும் வாசகர்களுக்கு அதிர்வுகளை, தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான படைப்புகளையும், படைப்பாளிகளையும் கொண்டாட தமிழ் சமூகம் என்றும் மறந்ததில்லை.

ஒருவர் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்களில் வைக்கும் வாசகமாகட்டும், வீடியோக்களாகட்டும் அதை வைத்தே ஒருவரின் அப்போதைய மனநிலை என்னவென்று அறிந்து கொள்ளலாம். இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் நினைப்பதை எதேச்சையாக மற்றவர் கூறும்போது, ‘நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்கனு’ கூறுவார்கள். ஒரு பாடலில் கூட நா.முத்துகுமார், “நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்” என்பது போல, பலவிதமான மனிதர்கள், பலவிதமான மனநிலையில் இணையத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் அப்போதைய சூழலுக்கு ஏற்றார் போல பார்க்கும் வரிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

அதுபோல பேஸ்புக்கில் மனுஷ்யபுத்திரன் கவிதையாக இடுவதும் அதனை இணையவாசிகள் இவை எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் என்றும் கொண்டாடி வருகின்றனர். ஒருமித்த கருத்துக்கள் உடையவர்கள் உணர்வுப்பூர்வமாக உருகிப் போய்விடுகிறார்கள். அதேபோல அவரின் கவிதைகள் ஸ்கீரின் ஷாட்டுகளாக எடுத்து தங்களுக்கு நடைபெறும் அனைத்திற்கும் மனுஷ்யபுத்திரன் தான் காரணம் என்று ஜாலியாக சிலாய்த்தும் வருகின்றனர். அதற்கும் அவர் ஜாலியாக பதில் அளித்து வருகிறார்.

நேற்றைய பதிவில் கொரொனா மூன்றாம் அலை வருவதற்கு கூட மனுஷ்யபுத்திரன் தான் காரணம் என கூறுவீர்கள் போல என பதில் அளித்தது இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

திமுகவில் இருந்து கூட்டணிக்கு தூது வந்தது: கமல்ஹாசன்

Ezhilarasan

தமிழகத்தில் 10 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

Halley karthi

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Vandhana