“ஹேய் சூப்பர் ஸ்டாருடா…#HunterVantaar பாருடா…” – வெளியானது வேட்டையன் 2-வது சிங்கிள்!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ‘Hunter Vantaar’ பாடல் இன்று வெளியானது. ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன்,…

“Hey Superstar.. #HunterVantaar Baruda” - Hunter 2nd Single Released!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ‘Hunter Vantaar’ பாடல் இன்று வெளியானது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதனிடையே வேட்டையன் திரைப்பட கதாபாத்திரங்களை படக்குழு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர்களில் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்தது. அந்த வகையில் நேற்று அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்தது. இப்படத்தில் அமிதாப் பச்சன் ‘சத்யதேவ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் 2-வது பாடலான ‘Hunter Vantaar’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.