கடுமையான பனிப்பொழிவு – 26 ரயில்கள் தாமதம்

அடா் மூடுபனி காரணமாக தில்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 26 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடா்…

அடா் மூடுபனி காரணமாக தில்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 26 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைநகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை வேளையில் மிகுந்த அடா் மூடுபனி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத் தொடக்கத்தில் காண்புதிறன் 25 மீட்டராகக் குறைந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு தினங்களாக காண்பு திறன் முன்னேற்றம் பெற்று வந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காண்புதிறன் 700 மீட்டராகப் பதிவாகியிருந்தது. கடந்த வாரத் தொடக்கத்தில் காண்பு திறன் 30 மீட்டராக்க குறைந்திருந்த பாலத்தில் திங்கள்கிழமை 1,200 மீட்டராக பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வடமாநிலங்களில் நிலவும் அடா் மூடுபனி காரணமாக தில்லி ரயில் நிலையங்களுக்கு வர வேண்டிய 26 ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டதாக வடக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.