தமிழ்நாட்டின் தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தெற்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று அதிகனமழை பெய்யலாம் எனவும் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







