காங்கோவில் கனமழை, வெள்ளம்; நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்…

காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்…

காங்கோவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்த 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் காணாமல்போனதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.