ஆபரண தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்வு; அதிருப்தியில் நகைப்பிரியர்கள்!

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து, 45 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டும், இறக்கம் கண்டும் வருகிறது. மே மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கத்தின்…

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து, 45 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது.

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்றம் கண்டும், இறக்கம் கண்டும் வருகிறது. மே மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை சற்று அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் வாங்க விரும்பும் இல்லத்தரசிகள், நகைக்கடைகளுக்குச் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து, 45 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 710 ரூபாய்க்கு விற்றது. ஒரு சவரன் தங்கம் தொடர்ந்து 45 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.