டெல்லியில் தொடரும் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து…

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியின் சில பகுதிகளில் தொடர்ந்து  பெய்து வரும் மழையால், நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. இதனால் சில படங்களில் தண்ணீர் தேங்கியது.டெல்லியில் உள்ள ஜன்பத், ஐடிஓ, மிண்டோ ரோடு, ஆசிரமம், ஆனந்த் விஹார் மற்றும் மயூர் விஹார் போன்ற பகுதிகளும், நொய்டா மற்றும் ஃபரிதாபாத்தின் பல இடங்களில் இன்று அதிகாலை மழை பெய்தது.

இதையும் படியுங்கள் : விருந்தில் அசைவ உணவு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் | அதிர்ச்சி சம்பவம்! 

டெல்லியில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அடுத்த சில மணிநேரங்களில், வடக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, மற்றும் பிராந்தியங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.