புயலுக்கு பெயர் போல் வெப்ப அலைக்கு பெயர்

புயல்களுக்கு பெயர் வைப்பதைப்போல் வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் பெரும் சேதம் விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில்…

புயல்களுக்கு பெயர் வைப்பதைப்போல் வெப்ப அலைகளுக்கும் ஐரோப்பிய நாடுகள் பெயர் சூட்ட ஆரம்பித்துள்ளன. காலநிலை மாற்றத்தால் பெரும் சேதம் விளைவிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலைகளால் பலர் உயிரிழந்தனர். சாலைகள் வெப்பத்தில் உருகின. விமான ஓடுபாதைகள் வெப்பத்தால் சேதமடைந்ததால் பிரிட்டன் விமான படைக்கு சொந்தமான பிரைஸ் நார்டன் விமான தளத்தில் விமானங்கள் தரையிரங்க தடை விதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புயல்களுக்கும் சூறாவளிக்கும் பெயர் சூட்டும் முறையில் வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டும் முடிவை ஸ்பெயின் நாடு தொடங்கி வைத்துள்ளது. அந்த நாட்டின் செவிலி நகரத்தில் வீசிய வெப்ப அலைக்கு “Zoe” என்று பெயரிட்டு, வெப்ப அலைகளுக்கு பெயரிட்ட உலகின் முதல் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

மக்களிடம் வெப்ப அலைகள் வீசும் என்று சொல்வதற்கு பதிலாக, சோ வீசும் என்று சொன்னால் அதன் தாக்கத்தின் அளவை மக்கள் புரிந்துகொண்டு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என அந்நாட்டு வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்ப அலைகளுக்கு பெயர் சூட்டுவது என முடிவு கடந்த மாதமே எடுக்கப்பட்டது. வானிலை அமைப்பான ProMeteo Sevilla மற்றும் அமெரிக்காவின் ராக்பெல்லர் பவுண்டேஷன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர்.

இதன்படி, காலநிலை நிபுணர்கள், வானிலை நிபுணர்கள் எல்லோரும் இணைந்து, கடந்த காலத்தில் பதிவான வெப்பம், அந்த காலகட்டத்தில் உள்ள வெப்பம், ஈரப்பதம் இவற்றை வைத்துக்கொண்டு வருகின்ற ஐந்து நாட்களில் வீச இருக்கும் வெப்ப அலைகளை கணித்து அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலையை மாற்றம் இன்னமும் என்னவென்ன தாக்கத்தையெல்லாம் ஏற்படுத்துமோ என்ற கவலை உலக நாடுகளை சூழ்ந்துள்ளது.  நம் நாட்டிலும் வெப்ப அலைகளுக்கு பெயர் வைக்க இந்திய வானிலை ஆய்வு மையமும் தயாராக வேண்டும் என்ற எண்ணம் காலநிலை ஆய்வாளர்களிடம் உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.