“அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!” – மு.க.ஸ்டாலின்

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைப்வரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “ மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.

பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.

மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.