ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது – நடிகர் #Rajinikanth!

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  கேரள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழு தாக்கல் செய்த அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலரும்…

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கேரள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழு தாக்கல் செய்த அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து முன்வைத்து வருகின்றனா்.

பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகா் ரஜினிகாந்த் அது குறித்து தனக்கு தெரியாது என பதில் அளித்துள்ளாா். சென்னை விமான நிலையத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஹேமா குழு அறிக்கை குறித்து எனக்கு தெரியாது. ‘வேட்டையன்’, ‘கூலி’ திரைப்படங்களின் பணிகள் நன்றாக செல்கின்றன. சென்னையில் நடைபெறும் ஃபாா்முலா காா் பந்தயம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றாா் அவா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.