“போட்டியை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்” – தோனியை புகழ்ந்த ரோஹித் சர்மா!

தோனி போட்டியை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார் என ரோஹித் சர்மாக புகழ்ந்து பேசியுள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் இதுரை நடந்த ஐபிஎல் தொடர்களில் தலா 5 கோப்பைகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதையடுத்து 2024 ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் கேப்டன்கள் மாற்றம் நிகழ்ந்தது. அதன் பின்னர் இரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியில் மும்பை அணியை  வீழ்த்தியது. இதையடுத்து வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  இதனிடையே தோனி சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.

இந்த சூழலில் தோனியின் தலைமை பொறுப்பை ரோகித் சர்மா புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டியில்,  “தோனி கேப்டனாக  பல போட்டிகளில் வென்றி அடைந்துள்ளார். அவருக்கு எதிராக விளையாடும்போது ரிலாக்‌ஷாக இருக்க முடியாது. தோனி போட்டியை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார். எனவே கவனமுடன் இருக்கவேண்டும் ரிலாக்‌ஷாக இருக்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.