ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் திடீர் ராஜிநாமா!

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜிநாமா செய்துள்ளார்.   ஹரியானா மாநிலத்தில் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் மக்களவைத்…

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜிநாமா செய்துள்ளார்.

 

ஹரியானா மாநிலத்தில் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் ஜனநாயக ஜனதா கட்சி சார்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும்,  இதற்கு பாஜக மறுத்ததால்,  இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி முறிந்தது.  இதனையடுத்து அரசியல் சூழலால் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அவரது அமைச்சரவை இன்று ராஜிநாமா செய்தது.

ஹரியானா சட்டப்பேரவையில் உள்ள 90 உறுப்பினர்களில்,  பாஜகவுக்கு 40 உறுப்பினர்களும்,  காங்கிசுக்கு 30 உறுப்பினர்களும்,  ஜேஜேபி கட்சிக்கு 10 உறுப்பினர்களும் உள்ளனர்.   இது தவிர 7 சுயேச்சை எம்எல்ஏக்-களும்,  இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) மற்றும் ஹரியாணா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்எல்ஏ- வும் உள்ளனர்.

இந்நிலையில், மனோகர் லால் கட்டார் ராஜினாவையடுத்து,  சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நயாப் சைனி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.