மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது அதீத அழுத்தம் இருக்கும்! – பார்த்திவ் படேல் கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்வார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து…

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்வார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்த நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “இது காசு கொடுத்து சேர்த்த படையல்ல… தானா சேர்ந்த படை…” – கோவையில் அண்ணாமலை பேச்சு

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அதிகப்படியான அழுத்தத்தில் இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது :

“மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் அறிமுக தொடரில் வழிநடத்தி கோப்பையை வென்ற விதம் சிறப்பாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியாவின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கும். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது வெற்றி கிடையாது. கோப்பையை வெல்ல வேண்டும். மும்பை அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகிறது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்து, அணியை வழிநடத்தப் போகும்  ஹர்திக் பாண்டியா மீது அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.”

இவ்வாறு பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.