சென்னை அண்ணா சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி – உற்சாகமாக நடனமாடிய பொதுமக்கள்

சென்னை அண்ணா சாலை பகுதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை அண்ணாசாலை பகுதியில் ஸ்பென்சர் முதல் ஜி.பி.சாலை வரை வாகனங்கள் செல்லாமல் பொதுமக்கள் கொண்டாடும் ஹாப்பி…

சென்னை அண்ணா சாலை பகுதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்னை அண்ணாசாலை பகுதியில் ஸ்பென்சர் முதல் ஜி.பி.சாலை வரை வாகனங்கள் செல்லாமல் பொதுமக்கள் கொண்டாடும் ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாசாலையில் LIC அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

கயிறு இழுத்தல், கோலப் போட்டி என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா, உடற்பயிற்சிகள், செல்ல பிராணிகள் கண்காட்சி என ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் அண்ணாசாலை களைகட்டியது. ஸ்கேட்டிங், கூடைப்பந்து, சைக்கிளிங், நடனம் ஆடுதல் என பல பொழுது போக்குகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும், ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் பாடல்களின் இசைக்கு ஏற்றார் போல் உற்சாகமாக நடமாடினர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.