மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் உசைன் போல்ட் மைதானத்தில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.
இதில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 45 நிமிடங்களில் 8 வகையான 37 யோகாசனங்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் எம்.வி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் “அனைவருக்கும் உலக யோகா தின வாழ்த்துகள் என தமிழில் உரையை தொடங்கினார் முன்னதாக மாணவர்களிடம் பேசுகையில் “யோகா பயிற்சி மேற்க் கொள்வதன் மூலமாக உடல் நலத்தையும், மன நலத்தையும் நல்ல நிலையில் வைத்து கொள்ள முடியும்” என பேசினார்.







