காரிலிருந்து காணாமல் போன கைதுப்பாக்கி; தீவிர விசாரணையில் போலீஸ்

பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, பெட்ரோல் பங்க்…

பெட்ரோல் பங்க் உரிமையாளர் காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணா, பெட்ரோல் பங்க் டீலரான இவர், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தீபாவளி தினத்தில் இனிப்புகள் கொடுக்க சென்றபோது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கி காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த கைத்துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து துப்பாக்கியை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.