ட்ரைலரிலே மண்வாசனையை அள்ளிதெளிக்கும் ஹலித்தா சமீம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடக்கத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை அளித்திருந்தாலும் கால ஓட்டத்தில் அவர்களின் இயங்குதல், பங்களிப்பு இங்கு கேள்வி குறியாகவே காணப்படுகிறது. ஹலித்தா சமீம்…. இளம்படைப்பாளி 2014…

தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடக்கத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை அளித்திருந்தாலும் கால ஓட்டத்தில் அவர்களின் இயங்குதல், பங்களிப்பு இங்கு கேள்வி குறியாகவே காணப்படுகிறது.

ஹலித்தா சமீம்…. இளம்படைப்பாளி 2014 ஆம் ஆண்டு பூவரசம் பீப்பி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய இயக்குநர். கமர்சியலாக அப்படம் வெற்றி அடையாவிட்டாலும் விமர்சன ரீதியாக வெற்றி படைப்பு என்றே கூறலாம்.

இரண்டாவது படைப்பான சில்லு கருப்பட்டி மிகப்பிரமாண்ட வெற்றி என்றும் கூறலாம்.நான்கு கதை தொகுப்புகளை உள்ளடக்கிய படம் அவை; இயல்பான அன்பு, அதீத அன்பு, மெளனமான காதல் என்று அன்பின் வடிவங்களை வெவ்வேறு தளத்தில் விளக்கியிருப்பார். வாசிப்பு அனுபவம், மனிதர்களை படித்திருப்பது இவை இரண்டும்தான் ஹலீத்தா சமீமை மேலும் இயங்க வைக்கிறது என்றே கூறலாம்.

மிகப்பிரமாண்ட பொருள் செலவு, முன்னனி நடிகர்கள் என்ற தத்துவத்தை உடைத்திருப்பார். சாமானியர்களின் அன்றாட நிகழ்வை வசனங்களோட, வார்த்தைகளோட, கவிதையோட, கண்ணீரோட காட்டியிருப்பார். இவை அனைத்தையும் நம் வாழ்வில் கண்டிருப்போம், ஆனால் கால ஓட்டத்தில் கடந்திருப்போம்.அவற்றை காட்சிப்படுத்துவது மிக கடினம். மிக நேர்த்தியாக காட்சிபடுத்தியிருப்பார்.

மீண்டும் நான் களத்தில் இருக்கிறேன் என்று தற்போது மூன்றாவதாக ‘ஏலே’ என்ற பட ட்ரெய்லரை வெளியிட்டு ஆகச்சிறந்த ஆளுமையாக வலம்வருகிறார் ஹலித்தா சமீம். இயக்குநர் சமுத்திகனி மற்றும் மணிகண்டன் நடிக்கும் இப்படத்தில் ட்ரெய்லர் காட்சி தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்மாவட்ட கதைக்களமாக எடுக்கப்பட்ட இப்படம் தந்தை மகன் உறவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

கதையில் வரும் எந்த கதாபாத்திரமும் நடிகர்கள் கிடையாது. சாதாரண வெகுஜன மனிதர்களையே நடிகர்களாக்கியுள்ளார். கதைக்களத்த்தில் மிக முக்கியமான ஒன்று பாஷை ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வட்டார வழக்கு மொழியை ஒவ்வொரு கதாபாத்திரமும் தெள்ள தெளிவாக உச்சரிக்க வைத்துள்ளார்.

தாய் – மகன் உறவு அன்பின் ஊற்று; தந்தை – மகள் உறவு ஆதி ஊற்று; இவைகள் உணர்வுபூர்வமான பிணைப்புகளாக உள்ளடக்கிய உறவுமுறை, ஆனால் தந்தை – மகன் உறவு என்பது இந்திய கலாச்சாரத்தில் பாம்பும் கீரியுமாகவே காணப்படும்.

ட்ரெய்லர் காட்சியில் சமுத்திரகனி வெகுநேரமாக வீட்டிற்கு வராததை எண்ணி தேம்பி அழும் மகனை வந்து கட்டியணைத்து, ‘அப்பா செத்து போனாலும் இப்பிடிதான் அழுவிய்யாடா, அப்பாக்கு அழுக பத்தலைடா’ என கூறுகிறார்.மகன் வளர்கிறான் பின் வயது மூப்பில் இறக்கிறார் தந்தை, அப்போது பிரேதத்துடன் பேசுகிறார் மகன் ‘அழுகிற மாதிரி என்ன பண்ணுன?’ என்று கேட்கிறார்.

இந்த கருப்பொருளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ட்ரைலரில் ஆரம்ப காட்சியே சாவுவீடு போன்ற காட்சிப்படுத்தப்பட்டிருக்கு இவற்றில் சென்டிமெண்ட் சம்பிரதாயம் என்பபதையும் உடைத்தெறிந்திருப்பார் என்றே கூறலாம். Commercial க்காக Compromise ஆகாத ஒரு படைப்பாளி என்றே ஹலீத் சமீமை கூறலாம்.ஏலே திரைப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

எழுத்து – மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply