ஹஜ் புனித யாத்திரையின்போது சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இறைதூதர் நபிகளின் தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் தமழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகைகள் நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், இனிப்புக்களை பரிமாறியும் இஸ்லாமியர்கள் தங்களின் அன்பையும், கருணையையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையின்போது உலகம் முழுவதிலும் வாழும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி நடப்பாண்டு சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா புனித யாத்திரைக்கு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர். மதினாவில் கடுமையான வெப்பநிலை காணப்படும் நிலையிலும் யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மதினா நகரில் ஜமாராத் என்று அழைக்கப்படும் மூன்று சுவர்களில் கூழாங்கற்களை வீசி யாத்ரீகர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
- பி.ஜேம்ஸ் லிசா








