தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணிக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது. இதன்…

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணிக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

50-வது நிமிடத்தில் தமிழ்நாடு வீராங்கனை துர்கா ‘சுய கோல்’ அடித்தார். இதனால் ஹரியாணா 1-0 என முன்னிலை பெற்றது. எனினும் அடுத்த 7-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. தொடர்ந்து 83-வது நிமிடத்தில் இந்துமதி கார்த்தீசன் கோல் அடித்து அசத்தினார். இதனால் தமிழ்நாடு அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

கடைசியாக 2017-18-ம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி பட்டம் வென்று அசத்தி உள்ளது.

இந்நிலையில், தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்நாட்டு அணிக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளின் இறுதியாட்டத்தில் ஹரியானா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வாகையர் பட்டம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கணைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டு அணியை சிறப்பாக வழிநடத்திய கடலூர் வீராங்கனை இந்துமதி கதிரேசனுக்கு சிறப்பு வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.