புனித ஹஜ் பயணம்: விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு!

புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம்…

புனித ஹஜ் பயணம் செல்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.

இதையும் படியுங்கள்: நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்கிறது – நடிகர் வடிவேலு!

இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது.  இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.