“டியர்” திரைப்படத்தின் டிரைலரை வெளியிடும் அஸ்வின்!

ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிடவுள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’…

ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிடவுள்ளார்.

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ’டியர்’ என்ற திரைப்படம் வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் ’ரிபெல்’ மற்றும் ’கள்வன்’ ஆகிய இரண்டு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் ’டியர்’ திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார்,  ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

https://twitter.com/UVCommunication/status/1776130543496970532?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1776130543496970532%7Ctwgr%5E6cb4b27b9fb04d104c65729aa35d57cfc471aa01%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fravichandran-ashwin-joined-in-gv-prakash-in-dear-movie-aishwarya-rajesh-tamilfont-news-353031

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (ஏப். 5) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் வெளியிடப் போகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ட்ரெய்லரில் இருக்கும் வாய்ஸ் ஓவர் கூட அஸ்வின் குரல் தான் என்றும் கூறப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த ட்ரைலருக்காக மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.