போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சு; பள்ளி மாணவர்கள் தேம்பி அழுத நெகிழ் சம்பவம்!

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு, பெண் காவலர் தேம்பி அழுத காட்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை கொளத்தூர் ஐசி.எப் அம்பேத்கர் மன்றத்தில், காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு…

போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் உருக்கமான பேச்சை கேட்டு, பெண் காவலர் தேம்பி அழுத காட்சி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை கொளத்தூர் ஐசி.எப் அம்பேத்கர் மன்றத்தில், காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்களுடன், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். நடிகர் தாமு, போதை பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பாதுகாத்து வளர்ப்பது பெற்றோர்களே எனவும், அவர்களின் அன்பு அளவிடமுடியாதது” என்று உருக்கமாக பேசினார். தாமுவின் பேச்சை கேட்டு, அங்கிருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கி அழுதனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரும், தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதது, அங்கிருந்தோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டிகர் தாமுவின் உருக்கான உரையை கேட்டு, தாங்கள் மனவருந்தியதாகவும், இனி பெற்றோருக்கு மதிப்பளித்து, கல்வி கற்பதில் மட்டுமே கவனத்தை செலுத்துவோம் என மாணவ- மாணவியர் உறுதி கூறினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.