குரு நானக் ஜெயந்தி : குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு வாழ்த்து..!

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சீக்கிய மதத்தை நிறுவியவர் குரு நானக் ஆவார். மேலும் அவர்  சீக்கிய மதத்தின் முதல் குருவாக கருதப்படுகிறார். இவர் 1469-1539 ஆண்டுகளில் வாழ்ந்தார்.

இவரின்  பிறந்தாநாளை சீக்கியர்கள் பண்டிகையாகவும் மற்றும் பிரார்த்தனைக்கான நாளாகவும் கடை பிடிக்கின்றனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரு நானக் ஜெயந்தி இன்று (நவ.05) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தனது  குருனானக் ஜெயந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

”குருநானக் ஜெயந்தியின் புனிதமான நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு குருநானக் தேவ் ஜியின் கொள்கைகளையும் மதிப்புகளையும் ஏற்றுக்கொள்ள நம்மைத் தூண்டுகிறது மற்றும் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப நம்மை வழிநடத்துகிறது. உண்மை, நீதி மற்றும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வாழ்வதே வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பதை அவரது செய்தி நமக்குக் கற்பிக்கிறது. அவரது போதனைகள் ஒரு கடவுள் மற்றும் மனித சமத்துவத்தை வலியுறுத்துகின்றன. நேர்மையுடன் வாழவும், வளங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் அவர் நம்மைத் தூண்டுகிறார்.

இந்த சந்தர்ப்பத்தில், குருநானக் தேவ் ஜியின் கொள்கைகளை நம் வாழ்வில் உள்வாங்கிக் கொள்வோம், மேலும் அமைதியான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அவர் காட்டிய பாதையைப் பின்பற்றுவோம்”என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.