ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள வீட்ல விசேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில், நடிகர் சத்யராஜ், ஊர்வசி, தயாரிப்பாளர் போனி கபூர், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட படகுழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், பாகு பலியில் நடித்த பிறகு பழைய சத்யராஜ் மீட்டு எடுக்க யாரும் வரவில்லை எனக் காத்திருந்தேன். அப்போது தான் ஆர்.ஜே பாலாஜி வந்தார் எனக் குறிப்பிட்டுப் பேசிய அவர், பாலாஜி என்னை எல்கேஜி படத்திற்கு நடிக்கக் கேட்டார். ஆனால், எனக்கு அந்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை என நான் நடிக்க மறுத்துவிட்டேன் எனத் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத்தொடர்ந்து, வீட்ல விசேஷம் படத்தில் நடிக்கக் கேட்டார். பொதுவாகக் கலைஞர்களுக்கு ஒரு திமிர் இருக்கும், நான் கூப்பிட்டு நீ வர மாட்டேன் என்று சொல்கிறாயா? என.., ஆனால் அந்த ஈகோ இல்லாதவர் ஆர்.ஜே பாலாஜி எனகூறிய அவர், இயக்குநர் சங்கருக்குப் பிறகு இதைத் தான் ஆர்.ஜே பாலாஜியிடம் தான் பார்ப்பதாகக் கூறினார். மேலும், இயக்குநர் சங்கர் சார் ஒரு படத்தில் நடிக்கக் கேட்டுத் தான் நடிக்கவில்லை எனவும், அதன் பிறகு மீண்டும் தன்னை அவர் அழைத்து நண்பன் படத்தில் நடிக்க வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
அண்மைச் செய்தி: ‘10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த அஞ்சல் துறை அதிகாரி; பரிதவித்த பெண்’
அதனைத்தொடர்ந்து பேசிய ஆர்.ஜே பாலாஜி, என் மீது முழு நம்பிக்கை வைத்து 3.50 கோடி கொடுத்தவர் ஐசரி கணேஷ். அதனால் தான் அந்த படத்தில் நான் சம்பளம் வாங்கவில்லை எனக் கூறிய அவர், லாபம் வந்தால் பங்கு பெற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இப்போது ரோலக்ஸ் வாட்ச் மிகப் பிரபலமாக உள்ளது. ஐசரி கணேஷ் எனக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கி கொடுக்கவில்லை. ஆனால், நானே சொந்தமாக ரோலக்ஸ் வாட்ச் வாங்கக் காரணமாக இருந்தவர் ஐசரி கணேஷ் எனத் தெரிவித்த அவர், இந்த படத்திற்கு நாங்கள் கியாரண்டி படம் வெற்றியடையும் எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.