முக்கியச் செய்திகள் இந்தியா

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பெங்களூருவில் தீவிர சிகிச்சை

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங்கிற்கு, பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதை யும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப் பட்டு, பாலம் விமானப்படை தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, பிபின் ராவத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தும், மதுலிக்கா மற்றும் ராணுவ அதிகாரிகள் உடல்கள் அடங்கிய பெட்டிகளுக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிபின் ராவத்தின் மகள்கள் மற்றும் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.

விபத்து நடத்த பகுதி

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். குன்னூர் வெலிங்டன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பெருங்களூரு விமானப் படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குரூப் கேப்டன் வருணுக்கு 80 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு உயிர்க்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் பெங்களூர் விமானப்படை மருத்துவனைக்கு சென்றனர். அங்கு குரூப் கேப்டன் வருண்சிங்கிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு… முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Saravana

கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!

எல்.ரேணுகாதேவி

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

Saravana Kumar