குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப TNPSC தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான, முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது முடிவடைந்த நிலையில், குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், குரூப்-1 தேர்வு முடிவுகள், குரூப்-2, 2ஏதேர்வு முடிவுகள் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும், வனத்துறை அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு ஆகியவற்றிற்கான கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.







