முக்கியச் செய்திகள் தமிழகம்

குரூப் 1 தேர்வு – விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

 

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிப்பை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ந் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

http://www.tnpsc.gov.in / http://www.tnpscexams.inஎன்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஒருமுறைப்பதிவில் தங்களது பதிவு எண்ணை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும். மேலும் நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை தமிழ் மொழியில் பயின்று இருந்தால் அதற்கான இடஒதுக்கீடு கோரலாம். மேலும் உடற்தகுதி உள்ளிட்ட விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.
முதநிலைத் தேர்வுக்கு இரண்டு விருப்ப மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஏதேனும் ஒரு மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரை வைகையாற்றில் அடுத்தடுத்து அதிகரிக்கும் உயிரிழப்புகள் 

Dinesh A

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

Jeba Arul Robinson

பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ

Halley Karthik