சசிகலா உடல்நிலையில் தொடர் முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

சசிகலா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் உடல்நிலை…

சசிகலா உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாக விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சுவாச முறை அனைத்தும் சீராக உள்ளது என்றும், சர்க்கரை அளவில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதால் இன்சுலின் வழங்கப்படுகிறது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை பத்திரம் ஒப்படைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply