நாட்டின் முண்ணனி நிறுவனமான யூனியன் பேங்க் ஆஃப்ப் இந்தியா முறையான அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது காலியிடங்களை நிரப்புகின்றன. அந்த வகையில் தற்போது யூனியன் பேங்க் ஆஃப்ப் இந்தியா சார்பில் மெகா வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை கீழே காண்போம்…!
பணியிடங்கள்
நாடு முழுக்க மொத்தம் 1865 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 95 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி
கல்வித் தகுதியினை பொறுத்தவரை, ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டம் பெற்ற தேதி ஏப்ரல் 01, 2022-க்கு முந்தையதாக இருக்கக்கூடாது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 01, 2026 நிலவரப்படி 28 வயது மிகாமல் இருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 20 ஆகும். அந்தந்த வகுப்பினருக்கு ஏற்ப தளர்வும் உண்டு.
சம்பளம்
பணிபுரியும் இடத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. கிராமப்புறம் ரூ.15,000, நகர்ப்புறங்களுக்கு ரூ.18,000, பெருநகரங்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரரின் உள்ளூர் மொழித்திறனை சோதிக்கும் திறன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி…?
ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unionbankofindia.bank.in/ வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் மே 19, 2026 அன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.







