நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் ஹீரோவாக விரைவில் நடிக்கவுள்ளார்.
சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், அசல், ஐ, எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன் நடிக்க வருகிறார். ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
தர்சன் கணேசன் பூனேவில் நடிப்பு பயிற்சி எடுத்துள்ளார். தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக்கூத்து நாடகங்கள் அரங்கேற்றியுள்ளார். தற்போது நடிப்பதற்கான தகுந்த பயிற்சியுடன் உள்ளார். அவருக்கு பல கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாத்தா போலவே தெருக்கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்தில் இருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகி வருகிறார்.







