போலந்தில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா.
போலந்தில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடக்கிறது. இந்த செஸ் தொடர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு துவங்கியது. இதில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றுள்ளனர்.
கிராண்ட் செஸ் தொடரின் இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 தொடர் நடக்கும். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை கொண்டு செல்வார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் கிரான்மாஸ்டர் பிரக்ஞானந்தா.




