படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை – பொதுமக்கள் நிம்மதி

படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை தற்போது ரூ.90 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை தொடங்கி வடமாநிலங்கள் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாகப்…

படிப்படியாக குறைந்து வரும் தக்காளி விலை தற்போது ரூ.90 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை தொடங்கி வடமாநிலங்கள் முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.  வியாபாரத்திற்காக அண்டை மாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.

இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாட்டில்  சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையான நிலையில், கடந்த 31ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சமாக 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக சென்னையில் தக்காளியின் விலை குறைய தொடங்கிய நிலையில், வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேட்டில் கடந்த சனிக்கிழமை ரூ.120க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி அதற்கு அடுத்த நாள் ரூ. 100 ஆகக் குறைந்தது. நாள்தோறும் ரூ.10 வீதம் குறைந்து  இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கு விற்பனையாகிறது.

தக்காளியின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.