சிறுவன் குடித்த மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இருந்ததா? அதிர்ச்சி தரும் வீடியோ!

வேலூரில் சிறுவன் குடித்த மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இருந்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த பி.கபுரத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன் நதியா தம்பதி. இவர்களுக்கு…

வேலூரில் சிறுவன் குடித்த மாம்பழம் ஜூஸ் பாக்கெட்டில் எலி இருந்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த பி.கபுரத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன்
நதியா தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் 4 வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் ஒட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மகனும்
மகளும் ஹோட்டல் எதிரே உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் கொடுத்து மாம்பழம் ஜூஸ்
வாங்கி வந்துள்ளனர். அப்போது சிறுவன் சரவணன் ஜூஸ் பாக்கெட்டின் ஓட்டையில் ஸ்ட்ராவை வைத்து உரிய தொடங்கியுள்ளான். ஜூஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது.

இதனிடையே ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்த பொழுது அதில் குட்டி எலி ஒன்று
இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதை கண்டு சிறுவன் அதிர்ச்சி அடைந்தான்.
மாம்பழம் ஜூஸில் எலி இருந்ததாக கூறப்படும் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து
வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.