மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரமாகும்: மத்திய அரசு

மலிவு விலையில் மருந்துப் பொருட்களை விற்கும் மத்திய அரசு நிறுவனமான மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரமாக உயர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை விற்கும் நோக்கில்…

மலிவு விலையில் மருந்துப் பொருட்களை விற்கும் மத்திய அரசு நிறுவனமான மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரமாக உயர இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் மருந்துப் பொருட்களை விற்கும் நோக்கில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana(PMBJP) எனப்படும் மக்கள் மருந்தகங்கள்.

சந்தையில் உள்ள தனியார் மருந்தகங்களோடு ஒப்பிடுகையில், இந்த மருந்தகங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் முதல் அதிகபட்சம் 90 சதவீதம் வரை மருந்துப் பொருட்களின் விலை குறைவாக விற்கப்படுவதாகக் கூறுகிறார் PMBJP-யை அமல்படுத்தி வரும் Pharmaceuticals & Medical Devices Bureau of India (PMBI)-ன் CEO ரவி தாதிச்.

மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் தரமானவை என்றும் அதே நேரத்தில் ஏழைகள் பயன்பெறும் வகையில் குறைவான விலையில் அவை விற்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 8,700 மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த ரவி தாதிச், இந்த எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.