ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடாவின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் வேதனையளிக்கும் செய்தியாக மாறியுள்ளது. ஒரு தொழில் தலைவராக மட்டுமின்றி, மனிதநேயமிக்க மனிதராகவும் பார்க்கப்பட்டவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் மறைவிற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரத்தன் டாடாவிற்கு உடலுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் உடலுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும்” என தெரிவித்தார்.
ரத்தன் டாடாவின் மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“ஒரு அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.







